கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண் கொலை - போலீசார் தீவிர விசாரணை

கமுதி அருகே கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்று அரசின் நிவாரணமாக 4 லட்ச ரூபாயை பெற்று உறவினர்கள் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

Update: 2019-05-26 11:45 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி வல்லகுளம் கிராமத்தை சேர்ந்த ராதிகாவுக்கும் , அருண்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ராதிகா தாய் வீட்டில் வசித்து வந்தார்.அப்போது ராதிகாவுக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டின் அருகே உள்ள கண்மாய் கரையில் உடல் கருகிய நிலையில் ராதிகா பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் உடலை கைப்பற்றி ராதிகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் ராதிகாவின் சாவில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.ராதிகாவை கள்ளகாதலன் கருப்பசாமி கொலை செய்து விட்டதாக கூறி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய கோரி ராதிகாவின் உறவினர்கள் உடலை பெற மறுத்து  6 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இளம்பெண் ராதிகாவின் மரணத்துக்கு அரசு நிவாரணமாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டு  முதல் தவணையாக 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ராதிகாவின் உறவினர்களிடம் அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் கள்ளக்காதலை கைவிடாததால் ராதிகாவை அடித்து கொன்ற உறவினர்கள், கள்ளக்காதலன் மீது பொய் புகார் கூறி நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து ராதிகாவின் உறவினர்கள் ஒரு பெண் உள்ளிட்ட  6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்