புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகிறது.

Update: 2019-04-30 20:17 GMT
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் விதமாக  10 கோடி ரூபாய் செலவில் புதிதாக ரோஜா பூங்கா மற்றும் கொய் மலர் சாகுபடி கூடம்  கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்  திறந்து வைக்கபட்டது.  சுமார் 16 ஆயிரம் வண்ண வண்ண ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு தீவிரமாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்பொழுது சீசன் துவங்கியுள்ளதால் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கி, சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தி வருகின்றன.  பூங்காவில் உள்ள மலர்கள் தங்களை அதிகம் கவர்ந்துள்ளதாகவும், அதிகப்படியான வண்ன மலர்களை  ஒரே இடத்தில் காண்பது   மிகுந்த  மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்