குல தெய்வ கோவில் முன்பு தீக்குளித்த ஜவுளி வியாபாரி

ஈரோட்டில் மது பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் ஜவுளி வியாபாரி ஒருவர் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு குல தெய்வ கோவில் முன்பே தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2019-03-09 10:48 GMT
ஈரோடு பழைய பாளையம் பகுதி அம்பிகை நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி முரளிதரன்.இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், தினேஸ்வரன், தீனதயாளன் என்ற இரு மகன்களும் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான முரளிதரன்,குடும்ப நலனை கருத்தில்கொண்டு அதனை கை விட பல முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், சமீப காலமாக விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில்,ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தனது குல தெய்வ கோவிலுக்கு வந்த முரளிதரன், மதுப்பழக்கத்தை கைவிட முடியவில்லை என கூறி மன்னிப்பு கேட்டு விட்டு, திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு 70 சதவீத தீக்காயகங்களுடன் முரளிதரன் உயிருக்கு போராடி வருகிறார்
Tags:    

மேலும் செய்திகள்