வாக்காளர்கள் வசதிக்காக 1950 என்ற உதவி எண்

வாக்குச்சாவடி மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகள் பற்றி அறிந்து கொள்ளு​ம் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Update: 2019-02-22 22:51 GMT
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்கள் பயன்பாட்டிற்காக பிரத்யேக வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விபரங்களை பெறமுடியும்.  இந்த இலவச எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை தகவல்களாக பெறலாம். இதுபோல, என்.வி.எஸ்.பி.  என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம், வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், அங்கு பணியாற்றும் அதிகாரிகள் விவரம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்