கேரள வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...

தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குள் வந்த கேரள வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-07 23:24 GMT
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குள் வந்த கேரள வனத்துறையினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கிராமத்தில் கேரள வனத்துறையினர் வந்த, வாகனத்தை மறித்த கிராம மக்கள் சிலர், தமிழக வனப்பகுதிக்குள் செல்ல முறையாக அனுமதி பெற்று இருக்கிறீர்களா? என கேள்வி கேட்டனர். பின்னர், பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்த தமிழக அதிகாரிகளை ஏன் அனுமதிக்கவில்லை என்று சராமாரி கேள்வி எழுப்பினர். கேள்வியை சமாளிக்க முடியாமல் திரும்பி சென்ற கேரள வனத்துறையினர், கண்டமனூர் வனச்சரகரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் கேரள வனத்துறையினர் அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்