ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்;
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட செயல்பட்ட பெருமைக்குரிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறந்த நிர்வாகியாகவும், கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்தார் எனவும் அவர் கூறியுள்ளார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.