உபரி இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு

"வரும் ஜனவரி 30 வரை அரசாணையை அமலாக்கமாட்டோம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல்

Update: 2019-01-25 20:39 GMT
இடைநிலை ஆசிரியர்களை,  எல்.கே.ஜி, யு.கே.ஜி.வகுப்புகளுக்கு பணி அமர்த்துவது தொடர்பான அரசாணை வரும் 30 ஆம் தேதி வரை அமலாக்கமாட்டோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக ஆசிரியர்  கூட்டணியின்  பொதுச் செயலாளர்  வின்சென்ட்  பால்ராஜ், பால் பிரின்ஸ் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள்  நீதிபதி சுப்பிரமணியன் முன்பாக  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர், வரும் 30 ஆம் தேதி வரை இந்த அரசாணை அமலாக்கப்படமாட்டாது என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கை ஜனவரி 30 -க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்