தமிழகத்தில் மாணவர் காவல் படை இன்று தொடக்கம் : சென்னையில் 6072 மாணவர்கள் இணைந்தனர்

தமிழகத்தில் மாணவர் காவல் படை இன்று தொடக்கம் : சென்னையில் 6072 மாணவர்கள் இணைந்தனர்;

Update: 2019-01-22 08:53 GMT
தமிழக காவல்துறையில் முதல் முறையாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் ஆகியோர் மாணவர் காவல் படையை தொடங்கி வைத்தனர். சென்னையில் 138 பள்ளிகளில் 6072 மாணவ மாணவிகள் மாணவர் காவல் படையில் இணைந்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர். விசுவநாதன் தெரிவித்தார். இதில் சேரும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும், மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்