சித்தப்பாவை அடித்து கொன்ற அண்ணன் மகன் கைது
உருட்டுக்கட்டையால் சித்தப்பா மீது சரமாரி தாக்குதல்;
சென்னை அடுத்த ஆவடியில் சித்தப்பாவை, அண்ணன் மகனே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் மோட்டரை வேறு இடத்தில் பொருத்தியதால், ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவலறிந்து காவல்துறையினர் அண்ணன் மகன் தேவராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.