மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் கைது : ஆளுநர் மாளிகை காவலர் உட்பட 7 பேர் சிறையில் அடைப்பு

மருத்துவர் இல்லத்தில் கொள்ளையடிக்க துப்பாக்கி தந்து உதவிய ஆளுநர் மாளிகை பாதுகாவலர் உள்பட 7 பேரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-12-19 10:47 GMT
மேலூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் அவரது மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் மற்றும் 
நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில், கொள்ளைக்கு துப்பாக்கி தந்து உதவியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய சிஆர்பிஎப் வீரர் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், சி.ஆர்.பி.எப் காவலர் குமார் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இன்று மேலூர் நீதித்துறை நடுவர் பழனிவேல் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். சிஆர்பிஎப் காவலர் குமார் உள்பட 7 பேரை ஜனவரி 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, கைதானவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்