கஜா புயலில் சுவர் இடிந்து 3 வயது குழந்தை தலை சிதறி பலி
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற துப்புரவு பணியாளரின் மகன் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.;
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற துப்புரவு பணியாளரின் மகன் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டுக்கோட்டையில் உள்ள ஏரிப்புறக்கரை அருகே காந்தி நகரில் வசித்து வரும் துப்புரவு பணியாளரான முத்துக்குமார், கடந்த 15 ஆம் தேதி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி அதிகாலை கஜா புயலின் தாக்குதலால் அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவரது பாட்டி, மனைவி படுகாயமடைந்த நிலையில், அவரது 3 வயது மகன் கீர்த்திவாசன் தலை சிதறி உயிரிழந்துள்ளான்.