வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்

கூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.

Update: 2018-11-20 18:51 GMT
கூகுள் மேப்பில் நிறுவனங்களின் முகவரி, தொலைப்பேசி எண்ணை யார் வேண்டுமானாலும்  மாற்றும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்தி, மகராஷ்டிரா மாநிலம் தானேவில் வங்கியின் PHONE BANKING தொலைப்பேசி எண்ணை மாற்றியுள்ளனர். இதனை அறியாத வாடிக்கையாளர்கள், மோசடி நபர்கள் அளித்துள்ள எண்ணை தொடர்பு கொண்டு, வங்கி அதிகாரிகள் என்று நினைத்து ATM PIN CARD உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனை பயன்படுத்தி, மோசடி நபர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளனர். இது தொடர்பாக மகராஷ்டிரா சைபிர் பிரிவு போலீசாருக்கு மூன்று புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் முறைப்படி புகார் அளித்துள்ளதாக மகாராஷ்டிரா போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்