கந்தசஷ்டி விழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2018-11-14 06:06 GMT
திருப்பரங்குன்றம்

முதல் படை வீடான திருப்பரங்குன்றம், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி விழாவை ஒட்டி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். 

திருத்தணி

இதே போல், ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில், நடைபெற்ற கந்தசஷ்டி விழா நிறைவு நாளில், சுமார் 10 டன் பூக்களை தலையில் சுமந்த படி பக்தர்கள், மேளதாளங்களுடன் மலை கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு சண்முகப் பெருமானுக்கு நடைபெற்ற, சிறப்பு அர்ச்சனையில், பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று, சஷ்டி விரதத்தை முடித்தனர். 

மேலூர்

இதே போல், ஆறாம் படை வீடான, மதுரை மேலூர் சோலை மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவில், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

ராமநாதபுரம்

இதே போல், ராமநாதசாமி முருகன் கோவிலில், கந்த சஷ்டியை ஒட்டி, சூரசம்ஹாரம் நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகன் நான்கு ரதவீதிகளில் சூரனை விரட்டி வந்து வதம் செய்த நிகழ்வை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்