சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை சேகரித்து வந்த தம்பதி - 42 ஆண்டுகளுக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைப்பு

விருத்தாசலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, 42 ஆண்டுகளாகத் தங்களுக்கு வந்த திருமண அழைப்பிதழ்களை சேகரித்து உரியவர்களிடம் அவற்றை வழங்கி நெகிழ செய்துள்ளனர்.

Update: 2018-11-09 19:24 GMT
மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் - மங்கையர்க்கரசி தம்பதி தங்கள் வீட்டுக்கு வரும் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை, நீண்ட காலமாக சேகரித்து வந்துள்ளனர். கடந்த 1976 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 750 அழைப்பிதழ்களை, லேமினேஷன் செய்து, கிராம சபை கூட்டத்தில், உரியவர்களிடம் வழங்கினர். அழைப்பிதழ்களை லேமினேஷன் செய்ய ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாகவும், கிராம மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதே, ராஜசேகர் - மங்கையர்க்கரசி தம்பதியினரின் கருத்தாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்