"கேக்குகளில் இறந்த நிலையில் கிடந்த ஈக்கள்" - கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க துணை ஆட்சியர் சரயூ உத்தரவு

"வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்த துணை ஆட்சியர்"

Update: 2018-10-07 22:57 GMT
கடலூர் பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றும்  பணி நேற்று நடைபெற்றது. இதனிடையே, துணை ஆட்சியர் சரயூ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடன் இணைந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தார். ஒரு பேக்கரியில் கேக்குகளில் ஈ க்கள் செத்து கிடந்ததை பார்த்த அவர், அதனை வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்தார். மேலும், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை ஆட்சியரின் இந்த நடவடிக்கை கடலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்