120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

அதிமுக அரசை கண்டித்து, வருகிற 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 120 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், அறிவித்துள்ளார்.

Update: 2018-10-01 16:55 GMT
அதிமுக அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியுள்ள அவர், 
   அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில். கண்ட ன பொதுக்கூட்டம்
நடத்தப்படும் என அறிவித்துள்ளார். 

* அரசு விழாவில் அப்பட்டமாக 
   அரசியல் பேசுகிறார்,    முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி என
விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் முதல்,  முதலமைச்சர்
 வரை அனைவர் மீதும் ஊழல் புகார் உள்ளதாக கூறியுள்ளார்.  

காற்றாலை ஊழல் குறித்து ஆதாரங்களை வெளியிட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ள மு.க. ஸ்டாலின்,  வழக்கு போட கெடு விதித்தும்
   அமைச்சர் தங்கமணி, தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். 

* எனவே, அதிமுக ஆட்சி குறித்து, மக்களிடம் விளக்க   தமிழகம் முழுவதும்120 இடங்களில், கண்டன பொதுக்கூட்டம் 
   நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். 

* மக்களிடம் செல்வோம் -  மக்களுடன் செல்வோம் என்று, தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்