தொழிலதிபரை தாக்கி கொல்ல முயற்சி : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி
தஞ்சாவூரில் தொழிலதிபரை தாக்கி கொல்ல முயன்ற வழக்கில் மருத்துவர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
தஞ்சாவூரில், கல்வி மற்றும் மோட்டார் வாகன விற்பனை நிறுவனங்களை நடத்தி வருபவர் இளங்கோவன். அவர் கடந்த 18ஆம் தேதி மருத்துவ கல்லூரி சாலையில் காரை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற போது, 4 பேர் வழிமறித்து கட்டையால் சரமாரியாக தாக்கி கொல்ல முயன்றனர். இந்த பரபரப்பு காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.