கொத்தடிமை முறை இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை - பன்னீர்செல்வம்

கொத்தடிமை முறை இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

Update: 2018-09-19 22:19 GMT
விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், தொழிலாளர்களுக்காக, சிம்புட் பறவை என்ற பெயரில் சுதந்திர நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கொத்தடிமை முறை இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில், குடிசைகளில் வாழும் 12 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, 2023-க்குள் தரமான வீடுகள் கட்டிதரப்படும் எனவும் துணை முதலமைச்சர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்