தண்ணீரில்லாமல் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் நிலையில் சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்..!

கடலூர் அருகே கடைமடை பகுதியில் தண்ணீர் இல்லாமல் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Update: 2018-09-11 10:22 GMT
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைமடை பகுதியான எடையார், பிள்ளையார்தாங்கள், வவ்வால்தோப்பு, திருநாரையூர், நடுத்திட்டு, செங்கனூர்பள்ளம், ஆகிய கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்களில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

 ஆனால், தற்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். குடி மராமத்து பணிகளை உரிய முறையில் செய்யாத காரணத்தால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றும், கருகும் பயிர்களைக் காப்பாற்ற மோட்டார் எஞ்சின் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து போதுமான தண்ணீர் கொடுத்து கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்