சொல்வதை செய்யும் கும்கி யானைகள்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 10:35 AM
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 
காட்டு யானைகளை விரட்டுதல், கொள்ளையர்களை சுற்றி வளைத்தல், பாகன் கட்ட​ளையை ஏற்று நடத்தல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். வரும் 12 ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகவும், 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இந்த கும்கி யானைகளும் பூஜையில் பங்கேற்க உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் யானைகளுக்கு உணவு வழங்குவது மற்றும் அவை செய்யும் பயிற்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு வெகுவாக ரசித்துச் சென்றனர்.