ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை - பொதுமக்கள் புகார்
பதிவு: ஆகஸ்ட் 27, 2018, 09:50 AM
திருவோண பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டுக்கடங்காத கட்டண கொள்ளை வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில், ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது 2 ஆயிரத்து 500 வரை வசூல் செய்யப்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.