மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம்...
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 08:08 AM
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி லாவண்யா தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிர்மலாதேவியின் பேச்சுக்களை சிடிகளாக மாற்றியுள்ளதாகவும், 160 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக பேராசிரியை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  3 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, சிம் கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட, நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு பரிந்துரைத்தது.