ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர் : சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆலோசனையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களை துணை சபாநாயகர் தம்பிரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்ததாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-08-24 10:56 GMT
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது 9 முறை பார்த்தோம், ஜெயலலிதாவுக்கு டிரக்யோஸ்டமி சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தோம் , அடுத்தமுறை சென்ற போது சுயமாக கால்களை மடக்கி நீட்டினார், பரிசோதனை செய்த போது, ஜெயலலிதா கை கூப்பி வணக்கம் சொன்னார். அப்பலோவில் வழங்கிய சிகிச்சை முழு அளவில் எங்களுக்கு திருப்தி அளித்தது. நாங்கள் தாக்கல் செய்த அறிக்கையில் இதை தெளிவாக கூறியுள்ளோம் ஜெயலலிதா உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு முன்னேற்றம் கண்டது. டிச.3ஆம் தேதி பார்த்த போது அறுவை மற்றும் அதி தீவிர சிகிச்சை தேவையற்றதாக இருந்தது பன்னீர்செல்வம், தம்பிரை, விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர் என சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் அளித்துள்ளார் .
 
Tags:    

மேலும் செய்திகள்