அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நடராஜன் நியமனம்

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-08-24 03:16 GMT
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் உத்தரவுப்படி, அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மாடி அறிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்