உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்
பதிவு: ஆகஸ்ட் 22, 2018, 02:30 PM
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது மாணவி அளித்த பாலியல் புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை சேர்ந்த மாணவி மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வாணாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரை மறுத்துள்ள கல்லூரி நிர்வாகம், மாணவி தவறான தகவலை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.