"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை
பதிவு: ஆகஸ்ட் 18, 2018, 05:34 PM
கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்து விட்டு, தமிழக அரசு அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.