கொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-17 10:21 GMT
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால்,  ஆற்றின் கரையோரம் உள்ள நீலத்தநல்லூர், மேலாத்துகுறிச்சி, கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, நீர் உட்புகுவதை தடுப்பதற்காக, மணல் மூட்டைகளை வைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. தடுப்பணைகள் இல்லாததால், அதிகளவிலான தண்ணீர் கடலில் கலந்து வீணாவதாகவும் அதை தடுப்பதற்காக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்