நாடாளுமன்ற தேர்தல் - மதுரைக்கு 6,810 வாக்கு இயந்திரங்கள்
பதிவு: ஆகஸ்ட் 14, 2018, 05:57 PM
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக மதுரைக்கு வந்துள்ள 6 ஆயிரத்து 810 வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரங்களை ஆட்சியர் வீரராகவ ராவ், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பாக முதற்கட்ட பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் வாக்கு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக எடுத்துரைக்கப்பட்டதோடு அதன் மீதான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.