ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-08-02 12:01 GMT
சென்னையில் கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக  நிஷான் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே 2008ஆம் ஆண்டு  ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் தங்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட  5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கித்தொகையை தமிழக அரசு தரவேண்டியுள்ளதாக சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

இதுதொடர்பாக 2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு நிஷான் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் உயரதிகாரிகள்,  நிஷான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது தமிழக அரசு 2000 கோடி ரூபாய் கொடுப்பது என உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிகிறது. முதல் தவணையாக 300 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 தவணையாக பணம் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் கையெழுத்தாகும் என தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்