நடுரோட்டில் கண்ணீருடன் நின்ற மாடுகள் - மாடுகளை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சி மணப்பாறையிலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லாரி மதுரை உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து பழுதாகி நின்றது.

Update: 2018-08-01 13:46 GMT
திருச்சி மணப்பாறையிலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லாரி மதுரை உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து பழுதாகி நின்றது. தனியாக நின்ற லாரியை சமூக ஆர்வலர்கள் சோதனை செய்ததில் கேரளாவிற்கு அடிமாட்டிற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர், உணவு வழங்கப்படாமல் நடுரோட்டில் மாடுகளை நிற்க வைத்தது மனதை உருக்கும் நிலையை ஏற்படுத்தியது. அவைகளை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்