கேட்கும் வரம் கொடுக்கும் பேராத்து செல்வி அம்மன்

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அழகிய தோற்றத்துடன் அருள்பாலிக்கும் பேராத்து அம்மனின் சிறப்புகள் குறித்து செய்தி தொகுப்பு.

Update: 2018-07-29 07:20 GMT
நெல்லையின் அடையாளமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றங்கரையின் பாளையங்குட்டத்துறையில் உள்ளது பேராத்து செல்வி அம்மன் கோயில்... பேராத்து செல்விஅம்மன் கோயில் என்பது தான் மருவி பேராச்சி அம்மன் உருமாறியதாக வரலாறு கூறுகிறது.150  ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது என்பதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. தாமிரபரணி ஆற்றின் மத்தியில், அம்மனின் சிலையை கண்டெடுத்த பக்தர் ஒருவர் ,  அதை கரையின் ஓரம் வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். பேராற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் என்பால் பேராத்து அம்மன் என்ற பெயர் உருவானதாக கோயில் வரலாறு கூறுகிறது.ஆற்றங்கரையில் பிரசவ வலியால் துடித்த சலவை தொழிலாளி பெண் ஒருவருக்கு கோவிலில் உள்ள அம்பாளே நேரடியாக பிரசவம் பார்த்துள்ளார். பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அம்மன் என்பதால் கர்ப்பிணி பெண்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதுடன், குழந்தைகளயும் அம்மன் பாதுகாப்பாள் என்ற ஐதீகம் உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்