சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது விபத்து
பதிவு: ஜூலை 21, 2018, 09:26 PM
சென்னை கந்தன்சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடம் சரிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் மீட்பு - 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல்.
இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
புதிய மருத்துவமனை கட்டிடத்தில் திடீர் விபத்து


கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலையில் எஸ்பி இன்போ சிட்டி கட்டிடத்திற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடத்தில், இரவில் திடீர் விபத்து நிகழ்ந்தது. ராட்சத தூண்கள் அமைத்து, கட்டிடம் கட்டப்பட்டு வந்தபோது, பாரம் தாங்காமல் கட்டிடம் சரிந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளிகளில், முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்டனர். விபத்தில் 30 தொழிலாளிகள் வரை, உள்ளே சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுவினரும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனர். இரவு நேரம் என்ற போதிலும், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி, முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.