அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவர்களின் படைப்புகள்

காரைக்காலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 700க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டு பிடிப்புகளை காட்சிபடுத்தினர்.

Update: 2018-07-21 08:35 GMT
புதுச்சேரியின் காரைக்காலில் டாக்டர் அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் விண்வெளி, விவசாயம், மின்னணு உள்ளிட்ட பல்வேறு புதுமை படைப்புகளை காட்சிப்படுத்தினர்.  இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.இவற்றுள் நூறு மாணவர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு பல்வேறு துறையில் ஒரு வருடம் இலவச பயிற்சி அளிக்கவுள்ளனர். மேலும், மாணவர்களால் உருவாக்கப்படும் செயற்கைகோளை அப்துல்கலாம் பிறந்த நாள் அன்று விண்ணில் செலுத்த உள்ளதாக ஸ்பேஸ் கிட்ஸ் இயக்குனர் ஸ்ரீமதிகேசவன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்