அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்படுகிறதா? போலீசாருக்கு வழங்கப்படும் சம்பளம் என்ன?
அரசு ஊழியர்களுக்கு இணையாக காவல்துறையினருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
காவலர்கள் நலன் தொடர்பான வழக்குகள், நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் வீட்டில் 4 காவலர்கள் ஆர்டர்லி முறையில் பணியில் உள்ளதாக கூறிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
என்கவுன்டரில் பலியான ரவுடி வீட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.