கடைமடை பகுதிகள் தூர் வாரப்படவில்லை என புகார் - தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பதிவு: ஜூலை 18, 2018, 09:04 PM
காவிரி கடை மடை பகுதிகள், தூர் வாரப்படாமல் உள்ளதாக தந்தி தொலைக்காட்சியில் நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் இதன் தாக்கமாக, இன்று மாவட்டம் முழுவதும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும், புத்தகரம், கயத்தூர், போலகம் உள்ளிட்ட பகுதிகளில்  328 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூர்வாரும் பணிகளை, கண்காணிக்க இரண்டு மூத்த ஐ.ஏ,எஸ் அதிகாரிகள், கடைமடை பகுதிக்கு வர உள்ளதாக கூறினார்.