வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி

சென்னையில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-07-18 14:49 GMT
சென்னை மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலாமேரி. வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக கணவன், மனைவி போல வந்த 2 பேர் நிர்மலா மேரியின் வீட்டிற்குள்  சென்றுள்ளனர். தண்ணீர் எடுப்பதற்காக நிர்மலாமேரி சமையலறைக்கு சென்ற போது, வீடு பார்க்க வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிர்மலா மேரியின் காதில் இருந்த கம்மலை அறுத்துள்ளார். ஆனால் சுதாரித்துக் கொண்ட நிர்மலாமேரி, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அந்த நபரை தாக்கியுள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். அப்போது கொள்ளையடிக்கும் எண்ணத்துடன் வந்த  பெண் தப்பி ஓடினார். ஆனால் கொள்ளையடிக்க வந்த அந்த நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்