ஈரோடு மாவட்டத்தில் 46 புதிய பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு: ஜூலை 06, 2018, 06:06 PM
ஈரோடு மாவட்டத்திற்கு மொத்தம் 112 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், 35 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று, 11 பேருந்துகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். ஈரோட்டில் நடந்த விழாவில் பேசிய அவர், தனியார் பேருந்துகளை விட, புதிய பேருந்துகளில் அதிக வசதிகள் உள்ளதாக கூறினார். மேலும், பள்ளி வேலை நாட்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.