மோதும் பலம் வாய்ந்த அணிகள்..தீர்மானிக்கும் முக்கிய மேட்ச் - CSK கோட்டை யாருக்கு சாதகம்?

Update: 2024-05-24 06:41 GMT

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் இன்று கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக ராஜஸ்தான் பார்க்கப்படும் நிலையில், பேட்டிங்கில் ஹைதராபாத் அட்டகாசமான லைன்-அப்பைக் கொண்டுள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போட்டி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்