டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இத்தாலி வீரர் ஜேக்கப்ஸ் முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்ஸ் தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.;

Update: 2021-08-01 22:23 GMT

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்ஸ் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். 100 மீட்டர் பந்தய தூரத்தை 9 விநாடிகள் 80 மணித்துளிகளில் கடந்து அவர் முதலிடம் பிடித்தார். இதன் மூலம், ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற சாதனையை ஜேக்கப்ஸ் படைத்து உள்ளார். இந்தப்  போட்டியில் அமெரிக்க வீரர் கெர்லே வெள்ளிப் பதக்கத்தையும், கனடா வீரர் டி கிராசே வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்