உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்;

Update: 2021-07-25 13:18 GMT
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் நடந்து வந்தது. இந்த தொடரின், மகளிர் 73 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பிரியா மாலிக்கும், பெலாரஸ் வீராங்கனை செனியாவும் மோதிக் கொண்டனர். இதில், 5-க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், பாலிவுட் திரை நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்