இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் கிரிக்கெட் விளையாட தடை

ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-07-31 05:46 GMT
19 வயதான பிரித்வி ஷாவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியின் போது அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட 'டெர்புடாலின்'' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பிரித்வி ஷா அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட 8 மாதம் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்