ஆசிய விளையாட்டு போட்டி : 54 பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 54 பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா உள்ளது.

Update: 2018-08-30 03:56 GMT
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இதுவரை 54 பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

ஹெப்டத்லான் போட்டி : தங்கம் வென்றார், ஸ்வப்னா



ஆசிய விளையாட்டு ஹெப்டத்லான் போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று, அசத்தினார்.

நீளம் தாண்டுதல் : தங்கம் வென்றார், அரபிந்தர் சிங்

 

நீளம் தாண்டும் பிரிவில், இந்திய வீரர் அரபிந்தர்சிங் தங்கம் வென்று, அசத்தியுள்ளார். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில், இவர், 16 புள்ளி ஏழு எழு மீட்டர் தாண்டி, இந்த சாதனையை எட்டினார்.

கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் - வெண்கலம் வென்றது இந்தியா


ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. 
அரையிறுதியில் சீனாவின் வாங் சுகின்- சன் யிங்ஷா ஜோடியை, எதிர்கொண்ட இந்தியாவின் சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி போராடி தோல்வி அடைந்தது. 
இதன் மூ
லம் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மகளிர் 200 மீ ஓட்டம்- இந்தியாவிற்கு வெள்ளி


ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இறுதிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை டுட்டி சந்த், வெள்ளி பதக்கம் வென்றார்.

மகளிர் ஹாக்கி - இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா



ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிர் ஹாக்கியில், இந்திய அணி 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக இறுதி போட்டிக்குள் முன்னேறியுள்ளது. ஜப்பானை 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, வருகிற 31 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ஜப்பானை எதிர்கொள்ளவிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்