டிராக்டரில் வந்த பாமக வேட்பாளர்...
ஒரு நொடி திகைத்த தேர்தல் அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவை தொகுதியின் பாமக வேட்பாளர் கணேஷ்குமார், அண்ணா சிலை பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார். பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயத்தை பாதுகாப்பது, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலையாயக் கடமை என தெரிவித்தார்