நடைபயணம் தொடங்கிய வைகோ - நிகழ்வில் பங்கேற்காத காங்கிரஸ்
தமிழகத்தில் ஜாதி, மத மோதல் கூடாது, இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது சமத்துவ நடைபயணத்தை தொடங்கி உள்ளார்.
திருச்சி தொன்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேவேளையில், காங்கிரஸ் சார்பில் வைகோவின் நடைபயண தொடக்க விழாவில் யாரும் பங்கேற்கவில்லை.