"முதுமை என்னை வாட்டுகிறது.. மக்களுக்காக போராடியே உயிரை விடுவேன்" - ராமதாஸ் உருக்கம்
சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில்,
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த தாமதப்படுத்தும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும், உடனடியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.