" ஊழல் செய்வதே கடந்த அரசுகளின் வாடிக்கை " _ பிரதமர் மோடி அதிரடி
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் 32 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பார்வையிட்ட பிரதமர், ஐ.ஐ.டி ரயில் நிலையத்திலிருந்து கீதா நகர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள், மாநிலத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டினார். 2017 ஆம் ஆண்டு வரை உத்தரபிரதேசத்தில் ஒட்டுமொத்த மெட்ரோ சேவையின் நீளம் 9 கிலோ மீட்டராக இருந்த நிலையில் தற்போது 90 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.