நாகர்கோவிலில் தற்காலிக புற்று நோய் மையம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

தமிழக நோயாளிகளின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்று நோய் சிகிச்சை மையம் தற்காலிகமாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-25 03:31 GMT
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து 560 புற்று நோயாளிகள் திருவனந்தபுரம் மண்டல புற்று நோய் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஊரடங்கு காரணத்தால் சிகிச்சைக்கு வர முடியவில்லை  என தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்ததை அடுத்து, கன்னியாகுமரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மண்டல புற்று நோய் சிகிச்சை மையத்தின் தற்காலிக சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுத்து  வருவதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்