எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.;
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தனது மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என கேள்வி எழுப்பினார்.