கிருஷ்ணசாமி எதிர்ப்பு - திருமாவளவன் பதில்

திருமாவளவனுக்கு நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுக்க கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 17:28 GMT
மத மாற்றம் தொடர்பாக ஆய்வு கட்டுரை சமர்ப்பித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நெல்லை மனோண்
மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுக்க கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டம் கொடுப்பதை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 


நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத மாற்றம் தொடர்பான தமது ஆய்வறிக்கையை, வல்லுநர்கள் குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக விளக்கம் அளித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்