நிலக்கரி இறக்குமதியில், தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு - ஸ்டாலின்

2012-ஆம் ஆண்டு முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, ஒரு ஏஜென்ஸியை நியமித்து நிலக்கரி தரமானது என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-08-16 06:33 GMT
2012-ஆம் ஆண்டு முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, ஒரு ஏஜென்ஸியை நியமித்து  நிலக்கரி தரமானது என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 
அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கையில் 

குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல, மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அறிக்கையிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில், ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடு குறித்து உண்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்